தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் தர்ணா போராட்டம் திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்ட, கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பணியாளர் சிக்கன நாணய கடன் சங்கத்தை காலி செய்து பொருளாதார செலவினை ஏற்படுத்தி சொசைட்டியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து சங்கு ஊதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.