சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் சமையல் குறிப்புகள் குறித்த யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.
மேலும், பெங்களூரு, சென்னை, திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஆகிய இடங்களில் உணவகங்களும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வணிக வளாகம் நடத்தி வரும் தொழில் அதிபர் ஒருவர் சிறுகனூரில் உள்ள அவரது இடத்தில் நான், ஹோட்டல் நடத்த என்னிடமிருந்து ரூ.52 லட்சத்தை பெற்றுக் கொண்டார். ஆனால், ஹோட்டலை நடத்த விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். இரண்டாவது முறையாக ஹோட்டலை பூட்டி விட்டார். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, அவர் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி உத்தரவின்படி, லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.