Rock Fort Times
Online News

திருச்சியில் போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கியால் சுடும் கவாத்து பயிற்சி…!

தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் (சட்டம்-ஒழுங்கு) உத்தரவின்பேரில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில், திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை கையாளும் பயிற்சி மற்றும் வாராந்திர கவாத்து பயிற்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.  இதில், திருச்சி மாநகரில் உள்ள சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையம், குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், மாநகர ஆயுதப்படை அதிகாரிகள் என சுமார் 530 பேர் கலந்து கொண்டனர்.  இதில், 46 போலீஸ் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை எப்படி கையாளுவது, துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை தனிதனியாக பிரித்து மீண்டும் ஒன்றிணை  ப்பது, அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியில் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.  பயிற்சியின்போது காவல் துணை கமிஷனர்கள் வடக்கு, தெற்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை கமிஷ்னர் (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்