Rock Fort Times
Online News

தமிழ் திரைப்பட டைரக்டர் திடீர் தற்கொலை- திரையுலகினர் அதிர்ச்சி…!

சிறுகதை எழுத்தாளரான ரவி ஷங்கர், சினிமாவில் இயக்குநர்கள் பாக்கியராஜ், விக்ரமன் போன்றவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து, 2002ம் ஆண்டு நடிகர்கள் மனோஜ், குணால் ஆகியோரை கதாநாயகர்களாக வைத்து, ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்கிற படத்தை இயக்கினார். குடும்பப் படமாக உருவான இது, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன்பிறகு ரவி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் சில படங்களுக்கு பாடல்களை எழுதினார். இந்நிலையில் ரவிசங்கர், சென்னை கேகே நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் விரக்தியில் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரவி சங்கர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்