விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அபார வெற்றி கண்டுள்ளது. இதனை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல, அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அவரை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Comments are closed.