Rock Fort Times
Online News

திருச்சி நீதிமன்ற நுழைவாயில்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள்…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 நுழைவு வாயில்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு காரணம் கருதி புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் வாயில் (கேட்) வழியாக நீதிபதிகள் மட்டும் செல்லும் வகையில் காலை 10.30 மணி வரை திறந்திருக்கும். ஐசிஐசிஐ வங்கி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள 2ம் எண் வாயிலில் வழக்கறிஞர்கள் மட்டும் உள்ளே சென்று வரலாம். 3 ஆம் எண் வாயில் வழியாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், குமாஸ்தாக்கள், அரசாங்க சாட்சி சம்பந்தப்பட்ட ஊழியர்கள், போலீஸ் வாகனங்கள் மட்டும் சென்று வரலாம். 4 ஆம் வாயில் வழியாக வழக்கறிஞர்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை மூலம் நீதிமன்ற வளாகத்தில் தொடர்பில்லாத நபர்கள் மற்றும் மூன்றாம் நபர்கள் நீதிமன்றத்தின் உள்ளே நுழைவது கட்டுப்படுத்தப்படும். இந்த சோதனை முயற்சி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பின்னரே, உரிய நடைமுறைகளின்படி முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம், வழக்கறிஞர்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்களை சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என திருச்சி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்