நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல, வாக்காளர்களை கவரும்வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்தந்த கட்சிகளின் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அதிமுக தேர்தல் அறிக்கை குழு பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ்.மஹாலில் இன்று (07-02-2024) மாலை திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. குமார், வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் முன்னேற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அப்போது அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் எம்.எஸ். நஜீமா பாரிக், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ரோஜர், ஏர்போர்ட் விஜி, கலைவாணன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, புத்தூர் ராஜேந்திரன், ஐ.டி.விங் வெங்கட் பிரபு, மீனவரணி அப்பாஸ், பாசறை இலியாஸ், பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினீயர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் வக்கீல் முத்துமாரி, வக்கீல்கள் ஜெயராமன், சசிகுமார், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், சுரேந்தர், வாழைக்காய் மண்டி சுரேஷ், சிறுபான்மை பிரிவு ஷாஜகான், கே.டி.அன்புரோஸ், டி.ஆர்.சுரேஷ்குமார், தென்னூர் மகேஸ்வரன், கே.டி.ஏ. ஆனந்தராஜ், வசந்தம் செல்வமணி, ஐ.டி. பிரிவு நாகராஜ், மார்க்கெட் பிரகாஷ்
உள்பட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.