திருச்சி மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- மேயர் மு.அன்பழகன் தேசிய கொடியேற்றி மரியாதை…!
திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று (26-01-2025) குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் வே.சரவணன் முன்னிலையில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 41 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ், சிறப்பாக பணியாற்றிய உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் , பணியாளர்கள் உள்ளிட்ட 67 நபர்களை கௌவுரவித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் சுழல் கேடயம் வழங்கினா அதேபோல, மாநகராட்சி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சிறந்த முறையில் பணியாற்றியமைக்கும் மற்றும் ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையப்பெற்ற நிலத்தினை கையகப்படுத்த தேவையான வருவாய் ஆவணங்கள் சேகரித்து விரைவில் சமர்ப்பித்தமைக்காவும்,உதவி ஆணையர் .மெ.த.
சாலைதவவளன், அரங்கநாதர் திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவினை 21 நாட்கள் வார்டுக்குழு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி, குடிநீர், தெரு விளக்கு பணி மற்றும் சாலை பணிகளை பராமரித்து இவ்விழா சிறப்பாக நடைபெற மேற்கொண்ட சிறப்பான பணியினைப் பாராட்டி உதவி ஆணையர் க.ஜெயபாரதி மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துரிதமாகவும், சம்மந்தப்பட்ட மனுக்களுக்குரிய கோரிக்கைகளை சிறப்பாக நிறைவேற்றியதற்கான பணியினைப்பாராட்டி உதவி ஆணையர் வீ.சரவணன் ஆகியோருக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் சிறப்பாக தூய்மைப் பணிகள் நடைபெறுவதற்கு உறுதுணையாக தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் கொசுப்புழு வளர்வதற்கு ஏதுவாக உள்ள ஆதாரங்களைக் கண்டறிதல், அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் தூய்மைப் பணியாளர் சேவையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவினை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து காந்தி மார்க்கெட் முன்பு உள்ள போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. குடியரசு தின நிகழ்ச்சிகளில் துணை ஆணையர் க.பாலு, நகரப்பொறியாளர் ப.சிவபாதம், நகர் நல அலுவலர் .விஜய் சந்திரன், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்காதேவி, .விஜய லட்சுமி கண்ணன், . பு.ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன், மா.செல்வராஜ், உதவி ஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Comments are closed.