திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் 76-வது குடியரசு தின விழா இன்று(26-01-2025) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. என்சிசி ஆசிரியர் வரவேற்றார். இந்திய தேசியக்கொடியை சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சார்ஜென்ட் கந்தசாமி ஏற்ற, அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பள்ளியின் என்சிசி மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு சார்ஜென்ட் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்றது. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை விழாவின் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சார்ஜென்ட் கந்தசாமி மற்றும் பள்ளியின் முதல்வர் அருட் சகோதரர் ராபர்ட் ஆகியோர் என்சிசி யில் சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தோல்பட்டயம் வழங்கி கௌரவித்தனர். குடியரசு தினவிழா உரையில் சிறப்பு விருந்தினர் பேசுகையில், இக்கால மாணவ, மாணவிகள் நம் தாய்நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எடுத்துரைத்தார். இவ்வேளையில் சுதந்திர போராட்ட வீரர்களின் தன்னலமின்மை பண்பையும், அவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்தார். அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி சகோதரத்துவ உணர்வுடன் இணக்கமாக வாழ வேண்டுமென வலியுறுத்தினார். இறுதியில், பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் நன்றி கூறினார்.
Comments are closed.