ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் சார்பில் குடியரசு தின விழா- சங்கத் தலைவர் ராமதாஸ் கொடி ஏற்றினார்…!
இந்தியா முழுவதும் இன்று (26-01-2025) 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதேபோல, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் சார்பில் குடியரசு தின விழா ஹிந்து மிஷன் மருத்துவமனையிலும், பெரியகருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் க.ராமதாஸ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். செயலாளர் ஆர்.சீனிவாசன் சமாதான புறா பறக்க விட்டார். இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்கைகால் பொருத்த வந்த நபர்களும் கலந்து கொண்டனர்.
Comments are closed.