மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 11 பேருக்கு நற்சான்றிதழ்- குடியரசு தின விழாவில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்…!
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருச்சியில் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 11 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்படி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய இணை பேராசிரியர் பி .ராஜமகேந்திரன், அவசர சிகிச்சை துறையில் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் ஏ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவ ஆணையத்தின் சான்றிதழ் பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றிய உதவி பேராசிரியர் டி.கௌரி திலகம், குறைமாத மற்றும் குறைந்த எடையுள்ள குழந்தைகளுக்கான கண் பார்வை குறைபாட்டினை கண்டறிந்து சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் உதவி பேராசிரியர் கே.ஆர்.விஜயபாரதி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிறப்பாக பணியாற்றி வரும் உயிரி மருத்துவ பொறியாளர் எஸ்.ஆனந்தவேல்,
நோயாளிகளுக்கு தேவையான பணிகளை கனிவுடன் முழு மனதுடன் செய்து சிறப்பாக பணியாற்றி வரும் செவிலியர் ஜெயசீலி வனிதா, நிதி சார்ந்த அலுவலக பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் உதவியாளர் ஏ.பாலமுருகன், தேசிய மருத்துவ ஆணையத்தின் சான்றிதழ் பெறுவதற்கான அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய உதவியாளர் பி.கிரிஜா தேவி மற்றும் சிறந்த செவிலியர் உதவியாளர் பணி ஆண் செவிலியர் சதீஷ்பாபு , ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் சுகாதாரப் பணியாளர் நாகராஜன், சிறந்த ஓட்டுநர் பணிக்கு ஓட்டுநர் ஜி.சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 11 பேருக்கும் இன்று(26-01-2025) திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ், அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரவேல், இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.