உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி “மறுபிறவி” என்ற விழிப்புணர்வு ஆல்பம் பாடல் வெளியீடு…! ( வீடியோ இணைப்பு)
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் உறுப்பு தான தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில், உறுப்பு தானத்தை மையப்படுத்தி “மறுபிறவி” என்ற விழிப்புணர்வு ஆல்பம் பாடலை அமைச்சர்கள் வெளியிட்டனர். இந்த ஆல்பம் பாடலை பாடலாசிரியரும், சமூக ஆர்வலருமான ஜெ.ராஜ்குமார் எழுதி, தயாரிக்க டோனி பிரிட்டோ இசை அமைத்திருந்தார். இந்த ஆல்பம் பாடலில் நடிகரும், இயக்குனருமான யார் கண்ணன், மைம் கோபி, தீனா ஆகியோர் நடித்துள்ளனர். “விழா” பட இயக்குனர் பாரதி பாலா இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்ப பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Comments are closed.