தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை ஒட்டிய பணியிடங்களில் பணிபுரியும் 11 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொடக்க கல்வி அலுவலர் ஆ. வள்ளியம்மாள் சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் இடைநிலை கல்வி அலுவலர் மு.மணிமேகலை சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் தொடக்க கல்வி அலுவலர் ரா. அண்ணாதுரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் துணை இயக்குனராகவும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் இடைநிலை கல்வி அலுவலர் எல்லப்பன் கடலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொடக்கக் கல்வி அலுவலர் முருகம்மாள், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சிவானந்தம், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், சென்னை தொடக்கக் கல்வி இயக்ககம் உதவி இயக்குனர் சுப்பாராவ் சென்னை தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குனராகவும்(நிர்வாகம்), பெரம்பலூர் மாவட்டம் இடைநிலை கல்வி அலுவலர் ஜெகநாதன் மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்டம் இடைநிலை கல்வி அலுவலர் சுகானந்தம் பெரம்பலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும், சிவகங்கை மாவட்டம் இடைநிலை கல்வி அலுவலர் உதயகுமார் திருப்பூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ளார்.
Comments are closed.