Rock Fort Times
Online News

திருச்சியில் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை ருசி பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …!

அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் திருச்சி வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம், பஞ்சப்பூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடம், ஒலிம்பிக் ஸ்டேடியம் அமைய உள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள காட்டூர் ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அங்கூரான்அறக்கட்டளை சார்பில் ரூ.2.5 கோடியில் அமைய உள்ள அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்க வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். பின்னர்மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று(01-08-2024) அந்தநல்லூர் அருகே உள்ள அல்லூர் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான பாரதி துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அவர் பள்ளி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவை ருசி பார்த்தார்.  அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவிகளிடம் காலை உணவு குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார், அருண் நேரு எம்.பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணகுமாரி,  திமுக மாவட்ட செயலாளர்கள் வைரமணி,  காடுவெட்டி தியாகராஜன், மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி,  கிழக்கு  மாநகரச் செயலாளரும்,   மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், கதிரவன், அப்துல் சமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் இன்ஜினீயர் எஸ்.முருகவேல், தொழிலதிபர் லால்குடி மேலவாளாடி கிளைச் செயலாளர் இன்ஜினியர் மரிய பிரான்சிஸ், குணசீலம் ஊராட்சி தலைவர் எம்.குருநாதன், அங்கூரான் அறக்கட்டளை நிர்வாகி விமல் பத்வாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்