திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்..
இந்த பேருந்து நிலையத்திற்கான இடமானது, திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தின் அருகே, 30 மீட்டர் அகலமும் 128 மீட்டர் நீளமும் கொண்ட சுமார் 94 சென்ட் இடமானது பார்வையிடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் கே.என்.சேகரன், மண்டலத்தலைவர் மதிவாணன், கருணாநிதி, கங்காதரன், சிவா, ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Comments are closed.