திருச்சியில் கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படும்: ரோட்டரி சர்வதேச இயக்குனர் முருகானந்தம்…!
ரோட்டரி சங்கத்தின் சர்வதேச இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எக்ஸல் குழும சேர்மன் முருகானந்தம் திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் நிருபர்களிடம் கூறியதாவது:- 119 ஆண்டுகள் பாரம்பரிய பெருமை கொண்ட சர்வதேச ரோட்டரி கிளப் 200 நாடுகளில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் திறம்பட செயலாற்றி வருகிறது. அமைதி, சுத்தமான குடிநீர், சுகாதாரம், நோய்களை எதிர்த்து போராடுதல், பெண்கள் மற்றும் குழுந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ரோட்டரி கிளப் முக்கியத்துவம் அளித்து வருகிறது. போலியோ ஒழிப்பில் ரோட்டரி கிளப்பின் பங்கு மகத்தானது. 1979 ம் ஆண்டு முதல் உலகளவிய போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி முக்கியத்துவம் தருவதால் 99.9 சதவீதம் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்காக ரோட்டரி, 2.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த ரோட்டரி கிளப் 1920ம் ஆண்டு கொல்கத்தாவில் முதலில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 41ரோட்டரி மாவட்டங்களில் 4 ஆயிரத்து 565 கிளப்புகளில் 1.7 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சர்வதேச ரோட்டரி சங்கத்தில் உள்ள 17 உறுப்பினர்களை கொண்ட குழு ரோட்டரியின் அடிப்படை கொள்கைகள், தீர்மானங்களை முடிவு செய்கிறது. அந்த 17 உறுப்பினர்களில் ஒருவராக நான் 2 ஆண்டுகள் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்தியாவில் இருந்து இதுவரை 4 பேர் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் திருச்சியிலிருந்து முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் பிரதிநிதியாக 17 உறுப்பினர்கள் கொண்ட ரோட்டரி சர்வதேச இயக்குனர் குழுவில் இடம் பெற்றுள்ளது சிறப்பானதாகும். திருச்சியில் கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும். இந்தியாவிலிருந்து 2 லட்சம் பேரை ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ரோட்டரி மாவட்ட கவர்னர் (தேர்வு) ராஜா கோவிந்தசாமி, கவர்னர் (நியமனம்) கார்த்திக், மாவட்ட ஆலோசகர் செந்தில் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.