Rock Fort Times
Online News

சிறுபான்மை மக்களின் தேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்- இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ…!

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி கிழக்கு மாவட்ட ஆய்வுக்கூட்டம் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் தேவைகளுக்காக சட்டமன்றத்தில் பேச நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன்.
கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கூட்டத்தில், மாநில பொது செயலாளர் போதகர் பால்தயாநிதி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மத்திய மண்டல செயலாளர் அடைக்கலராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், அருட்பணி விஜய்  பிலவேந்திரன், ஆர்.சி. மாநில துணை அமைப்பாளர் வின்சென்ட், மாவட்ட பொருளாளர் ஞானபிரகாசம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர்கள்
ஏனோக், வாசுகிஅமலா, ஸ்டீபன், மாவட்ட துணை செயலாளர் செல்வி, டி.இ.எல்.சி.மாவட்ட பொறுப்பாளர் ஜோஸ்வா ஜெயக்குமார், சி.எஸ்.ஐ மாவட்ட பொறுப்பாளர் தேவதாஸ் சாமுவேல், பி.சி.மாவட்ட பொறுப்பாளர் பொன்பிரிட்டோ, தொகுதி செயலாளர்கள் கனகராஜ்(கிழக்கு) , ஜேம்ஸ்( மேற்கு), மணப்பாறை மைக்கேல் ஆல்பர்ட், மாவட்ட நிர்வாகிகள் ஸ்டீபன்ராஜ், ஆரோக்யசேசு அந்தோணி மற்றும்  மகளிர் அணி பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை
மாவட்ட செயலாளர் இ.புஷ்பராஜ் செய்திருந்தார்.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்