Rock Fort Times
Online News

திருச்சியில் 60 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து -நாளை முதல் கட்ட முகாம்…!

போலியோ நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நாளை(03.03.2024) ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட முகாம்கள் நடக்கிறது. இதில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடக்கின்றன.
மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60,613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என 267 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் ரயில்வே நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிறமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செயயப்பட்டுள்ளன.இதற்கென 1036 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்