திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி
29-வது வார்டுக்கு உட்பட்ட 45- வது பீட் (ரோந்து) காவல் உதவி மையம் பகுதி நேரமாக செயல்படுகிறது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் குடித்து விட்டு குடிபோதையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். ஆகவே, இந்த காவல் உதவி மையத்தை முழு நேர காவல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
1
of 872
Prev Post
Comments are closed.