திருச்சி, உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குமார் (வயது 38). இவர் சாலை ரோட்டில் தள்ளு வண்டியில் மீன் கடை வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு 8 மணி அளவில், இவரிடம் உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற சடை மணி (வயது 38) என்பவர் கத்தியைக்காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்துமீன் வியாபாரி ஆர்த்தி குமார் உறையூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி, இவ்வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சடைமணியை கைது செய்து,பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.