திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் வேன் கவிழ்ந்து விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்… (வீடியோ இணைப்பு)
திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு பார்சல் சர்வீஸ் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை லால்குடியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் ஓட்டினார். அந்த வேன் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் கூத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் ஆபிரகாம் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி வேனை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர் . இந்த விபத்தினால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.