திருச்சி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க.ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறுகின்றனர். தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் வராததற்கு தி.மு.க.தான் காரணம். தற்போது கூட்டணி குறித்து பேசுவதற்கு மட்டும் அங்கு சென்று உள்ளார். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
விரைவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது அமலாக்க துறை விசாரணை நடத்தும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி சொத்துகள் தொடர்பான சோதனையில் கணக்கில் வராத ரூ.19ஆயிரம் கோடிக்கான சொத்து ஆவணங்கள் பிடிபட்டுள்ளன. தக்காளி வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொண்டால் அதன் விலை உடனே குறைந்து விடும். நாட்டின் பிரதமராகும் தகுதி தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இப்பேட்டியின் போது மாவட்டத் தலைவர் ராஜசேகரன், கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.