திருச்சி மாநகர பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் லாரிகள் மூலம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. 47 ஏக்கரிலான இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் நவீன எந்திரங்கள் மூலம் உரமாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் இந்த குப்பை கிடங்கில் இன்று ( 18.07.2023 )மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது காற்று பலமாக வீசியதால் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமள என பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அலுவலர்கள் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.