த.வெ.க அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், த.வெ.க.விற்கு ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் எடுத்த முடிவு. ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு. விலக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால் கட்சி முடிவு செய்யும். த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்கிறோம். கூட்டணியில் இல்லை. எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை. எங்கள் நூற்றாண்டு கால அரசியலில் நாங்கள் ஒருபோதும் கையூட்டை பெற்றதும் இல்லை, வேடிக்கை பார்த்ததும் இல்லை. எனவே சகோதரர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். நீங்கள் படித்து முதலமைச்சர் விஜய்க்கு சொல்ல வேண்டும். இவ்வளவு ஆண்டு கால வரலாற்றில் ஒரு நீதிமன்றத்திலும் ஊழலுக்காக கம்யூனிஸ்டுகள் தண்டிக்கப்பட்டது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.