போலி பாஸ்போர்ட், ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்ற வழக்குகள் தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பினர்( என்.ஐ.ஏ.) இன்று ( 11.10.2023 )சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர் வகுத்ததே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது. இவா் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. போலி ஆவணங்கள் அளித்து பாஸ்போர்ட் வாங்கிய வழக்கு, ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காஜிமார் தெரு முழுவதும் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது..
Comments are closed, but trackbacks and pingbacks are open.