Rock Fort Times
Online News

3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார், முதல்வர் ஜோசப் விஜய்…!

டெல்லியில் நாளை ( ஜூன் 11) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று( ஜூன் 10) காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பயணத்தின் போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. சில தேசிய கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை திரும்புவார்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்