தமிழக மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நவ.12-ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விரைவு பேருந்துகளை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் நவ.10 (வெள்ளிக்கிழமை) பயணம் மேற்கொள்ள திட்டமிடுவர். அவர்கள் இன்று (11.10.2023) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சனிக்கிழமை (நவ.11) பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (12.10.2023 ) தொடங்கவுள்ளது. வியாழக்கிழமை (நவ.9) பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு நேற்றே தொடங்கியது. அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். அது மட்டுமில்லாமல் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.