தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும்( ஜூன் 9) சில ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-
* பொதுப்பணித்துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நெடுஞ்சாலைத் துறைச் செயலாளராக எஸ்.ஜே.ஷிரு நியமனம்
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக சந்தீப் நந்தூரி நியமனம்
* மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவராக அழகுமீனா நியமனம்.
* தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆர்.சுரேஷ்குமார் நியமனம்
* சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் & நிதி) சித்ரா விஜயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.