டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று (ஜூலை 18) மாலை செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட விருது தேர்வுக் குழுவினர், மொழி வாரியாக சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த திரைப்படம் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர். நடிகர் கார்த்திக்கின் ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கும், நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருது ‘ராயன்’க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தார். கேப்டன் மில்லர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ‘மெய்யழகன்’ படத்தில் பணியாற்றிய சுரேன் ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருது அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த திரைப்பட எடிட்டருக்கான விருது அமரன் படத்திற்காக கலைவாணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஒவ்வொரு மாநிலம் வாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டன.

Comments are closed.