Rock Fort Times
Online News

தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் இன்று( ஜூலை 18) தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதேபோல, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள புஸ்ஸி ஆனந்த் வீட்டிலும் காலை முதலே நுற்றுக்கணக்கான தவெகவினர் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முதல்- அமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யை சந்தித்து புஸ்ஸி ஆனந்த் வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.! என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்