Rock Fort Times
Online News

“அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது”…* புள்ளம்பாடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு..!

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு நீதி வேண்டியும், தமிழகத்தில் போதை பொருள் புழக்கம், குதிரை பேரத்தை கண்டித்தும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் இன்று (ஜூலை 18) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி
செயலாளருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார். திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.என்.சிவகுமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பேசுகையில், “நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்றது 3 வருட கட்சி, ஆனால் நாங்கள் 54 வருட ஆலமரம்”. அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்