திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு: உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார்…!
திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று(10-09-2024) தேவர் ஹால் அருகில் உள்ள ஜான் பஜார் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள வருகை பதிவேடு, இருப்பு பொருட்களையும் ஆய்வு செய்தார். அப்போது அவர், ஏழை எளிய மக்களுக்கு சுவையாகவும், சுகாதாரமான முறையிலும் தொடர்ந்து உணவு வழங்குமாறு பணியாளர்களுக்கு வலியுறுத்தினார். பின்னர், ஜான் பஜார் மாநகராட்சி உருது பள்ளியில் அங்கன்வாடி மையத்தின் பணியாளர்கள் வருகை மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை கேட்டறிந்து அவர்களுக்கு தரமான உணவுகளை வழங்கவும், தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். மேலும்,பாலக்கரை பகுதியில் உள்ள அறிவுசார் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு அரசு பல்வகை தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவ- மாணவிகளிடம் படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் ஏதும் தேவையா என்று கேட்டறிந்ததோடு இன்டர்நெட் வசதிகள் இருக்கிறதா என்று கேட்டறிந்தார். அதற்கு மாணவ, மாணவிகள் இந்த மையத்தில் எங்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட் வசதிகள் போதுமான அளவு உள்ளது என்று தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி உதவி ஆணையர்கள் ஜெயபாரதி, சானலத், தவவளவன், மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.