Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூடல்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்…!

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாமாயில், துவரம் பருப்பு வழங்குவதில் காலதாமதம் கூடாது.  அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடையில் இறக்குவதற்கு இறக்கு கூலி கட்டாயம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பிச்சை பிள்ளை முன்னிலை வகித்தார். முடிவில் மாவட்ட செயலாளர் பொன்னர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செல்வமணி, அண்ணாதுரை, பாலகிருஷ்ணன், சிவா, செல்வேந்திரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.இதனால் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்