திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் மூலமாக லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழரான நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் இளங்கோ என்ற ஜானியுடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்தப் பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலையில் இருந்து நின்று விட்டார். அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட இளங்கோ, லண்டனில் ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்க உள்ளதாகவும் அதற்காக திருச்சியில் இருந்து மளிகை பொருட்களை வாங்கி அதை லண்டனுக்கு அனுப்புமாறும், மாதம்தோறும் அதற்கான ஊதியத்தை வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் முசிறியில் குடோன் ஒன்றை அந்த பெண் வாடகைக்கு எடுத்துள்ளார். தொடர்ந்து துபாயில் அந்த பெண் பெயரில் லைசென்ஸ் வாங்க வேண்டும் எனக் கூறி இளங்கோ அந்த பெண்ணை துபாய்க்கு அழைத்துள்ளார்.
அதன்பேரில் அந்தப் பெண் துபாய் சென்றார். அப்போது துபாயில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த பொழுது, அந்தப் பெண் உடை மாற்றும் காட்சிகளை இளங்கோ மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழகம் திரும்பிய அந்தப் பெண் வேறொரு நபரை மறுமணம் செய்து கொண்டார். மறுமணம் முடிந்தவுடன் இளங்கோவை தொடர்பு கொண்ட அந்த பெண், தனக்கு வேலை செய்வதில் விருப்பமில்லை அதனால் வேறு யாரையாவது வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொள்ளாத இளங்கோ லண்டனுக்கு புறப்பட்டு வரும்படியும், வரவில்லை என்றால் உடை மாற்றும் நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இளங்கோ என்கிற ஜானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.