திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் 1 முதல் 7 வரை உள்ள பகுதி மக்களுக்கு காலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் இருவேளை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை
குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை, வார்டு எண் 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஒருவேளை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.