Rock Fort Times
Online News

தி.மு.க.சார்பில் திருச்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்…!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகர திமுக மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி தென்னூர், பாபு செட்டி தெரு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர கழக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்தார். அதனைத் தொடர்ந்து 3000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை, கரும்பு, பொங்கல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் கமால் முஸ்தபா, காஜாமலை விஜய், மோகன்தாஸ், நாகராஜன், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,
மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், வர்த்தக அணி தொழிலதிபர் ஜான்சன் குமார், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, வட்ட செயலாளர்கள் காளை, புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ணபாரதி, சோழன் சம்பத், வட்ட பிரதிநிதி கர்ணா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்