Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே வி.ஏ.ஓ. அலுவலக மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சந்தைபேட்டையில் உள்ள அணியாப்பூர் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக கட்டிடம் கடந்த 2007 – 08ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் அறையில் பொதுமக்கள் பலர் நின்று கொண்டு இருந்தனர். நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறை வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகக் கட்டிடம் மிக மோசமாக உள்ள நிலையில் மாற்றுக் கட்டிடம் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்