முதல்வர் வருகை காரணமாக திருச்சி விமான நிலைய பகுதியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை-மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…!
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தர இருக்கிறார். பின்னர், காரில் சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டத்திற்கு செல்ல உள்ளதால் இன்று
(20.01.2025) மற்றும் நாளை( 21.01 2025 ) தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்
Comments are closed.