திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது…!
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரிதபடுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர்கள் சுபத்ராதேவி, பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் டி.என்.டி.நடேசன், இராவணன், அசோகன், டி.என்.சிவகுமார், பழனிசாமி, கண்ணூத்து பொன்னுசாமி, எஸ்.கே.டி.கார்த்திக், அன்பரசன், நகர செயலாளர்கள் பவுன்.ராமமூர்த்தி, எஸ்.பி.பாண்டியன், பொன்னி சேகர், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர், கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் செயலாளர்கள் பிச்சைபிள்ளை, ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், முத்துக்குமார், திருமலை, சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், சாந்தி, விஜயா, மாவட்ட பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சண்முக பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் அமல்ராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Comments are closed.