Rock Fort Times
Online News

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: திருச்சி மாவட்டத்தில் வருகிற 27ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்… * முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை!

தி.மு.க.முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந. தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், கழக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாள் வருகிற 27 ம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகங்களில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும், பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், இளைஞர் அணியினர் இரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடத்தியும், அன்னதானம் வழங்கியும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை வெகு விமரிசையாகவும், எழுச்சியுடனும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்