கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு குறித்த தகவல்களையும், பதிவுகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் சில சர்ச்சையான கருத்துக்களை கூறியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு முறையிட்டார். அப்போது அவர், பேட்டியின் போது உதயநிதி உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தார். நீதிமன்ற தடையை மீறி பேசினார். இந்த விவகாரம் குறித்து உள் விசாரணைக்குழு விசாரிக்கிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிடுவதாக குறிப்பிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உதயநிதி அளித்த பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.


Comments are closed.