இரண்டாம் கட்டமாக நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் திருச்சி உள்ளிட்ட 9 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது…* முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்..!
த.வெ.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கட்ட விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4-ந்தேதி சென்னையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருது மற்றும் உதவித் தொகைகளை வழங்கினார். தற்போது 2-வது கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை (26-11-2026) மற்றும் நாளை மறுநாள் (27-11-2026) சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார் நாளை (26-ந்தேதி) நடக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் திருச்சி, கோவை. ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், நாளை மறுநாள் (27-ந்தேதி) சேலம், நாமக்கல், கரூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கிறார்கள். விழாவுக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பிரத்யேக நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இதற்கான பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழா அரங்கிற்குள் செல்போன், காகிதங்கள், பேனா என எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments are closed.