திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மொத்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலவகையான பூக்களை மினி லாரி மற்றும் லோடு ஆட்டோக்கள் மூலம் விற்பனைக்காக எடுத்து வருவது வழக்கம்.அதன்படி இன்று அதிகாலை 3 மணி அளவில் ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து ரோஜா பூக்களுடன் மினி லாரி ஒன்று வந்தது.அந்த மினி லாரி சென்னை – திருச்சி ட்ரங்க் ரோட்டில் திருவானைக்காவலில் இருந்து திருவரங்கம் பகுதிக்கு திரும்பும் போது பாரம் தாங்காமல் ஒரு புறமாக தூக்கி கொண்டே சிறிது தூரம் சென்றது. அப்பொழுது சாலை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது மினி லாரி கவிழ்ந்து விழுந்தது. இதனால் ஆட்டோ மற்றும் பைக் முழுவதுமாக நசுங்கிது. இதில் ஆட்டோவில் அமர்ந்திருந்த டிரைவர் காந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த ஆட்டோ டிரைவர்ரை அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிறகு கவிழ்ந்து கிடந்த மினி லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். அந்தப் பகுதியில் செயல்படாமல் இருக்கும் சிக்னல் மற்றும் வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் அனைத்தும் வேகமாக வந்து திரும்புகின்றனர் அதன் காரணமாக இங்கு நிறைய விபத்துக்கள் நடைபெறுகிறது உடனடியாக அங்கு சிக்னல் செயல்பட வேண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments are closed.