திருச்சியில் இறக்கி வைக்கப்பட்ட சில நிமிடங்களில் ட்ரேயுடன் மாயமாகும் பால் பாக்கெட்டுகள்- சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை( வீடியோ இணைப்பு)
திருச்சி – புதுக்கோட்டை சாலையில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆவின் முகவர்களுக்கு வேன்கள் மூலம் பாக்கெட் பால் சப்ளை செய்யப்படுகிறது. ஆவின் பால் பண்ணையில் இருந்து அதிகாலை 2 மணி முதல் பால் பாக்கெட் எடுத்துச் செல்லப்பட்டு முகவர்கள் சொல்லும் இடங்களில் டிரேயுடன் இறக்கி வைக்கப்படும். காலை 5 மணிக்கு மேல் முகவர்கள் பால் பாக்கெட்டுகளை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். இந்தநிலையில் சில நாட்களாக பால் விற்பனை செய்யும் இடங்களில், வேன்களில் இருந்து இறக்கி வைத்து விட்டுச் செல்லும் பால் பாக்கெட்டுகள் டிரேயுடன் திருட்டு போனது. முதல் நாள் சுப்பிரமணியபுரத்திலும், மறுநாள் தென்னூரிலும், நேற்று பீமநகர் பகுதியிலும் முகவர்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் டிரேயுடன் திருடப்பட்டுள்ளன. திடீரென பால் பாக்கெட்டுகள் டிரேயுடன் திருட்டு போவதை கண்டு அதிர்ச்சியடைந்த முகவர்கள், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, டூ வீலர்களில் வரும் மர்ம நபர்கள் பால் பாக்கெட்டுகளுடன் டிரேயை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு பால் பாக்கெட்களை திருடி செல்லும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Comments are closed.