Rock Fort Times
Online News

துப்பாக்கியை துடைத்தபோது காலில் குண்டு பாய்ந்தது: பிரபல நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி…!

ஹிந்தி திரை உலகில் பிரபலமான நடிகராக உள்ளவர் கோவிந்தா. இவர் வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை துடைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காலில் குண்டு பாய்ந்தது. இதனால், வலியால் அலறி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு காலில் பாய்ந்த குண்டை அகற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் 3 ரோசஸ் என்ற படத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்