Rock Fort Times
Online News

5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 மரண தண்டனை…* சிவகங்கை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கையைச் சேர்ந்தவர் சந்திரன். தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவர், வீடியோ கேம் விளையாட செல்போன் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் திருப்பத்தூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று(24-04-2026) தீர்ப்பளிக்கப்பட்டது. சந்திரன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்