Rock Fort Times
Online News

மக்களுடன் முதல்வர் திட்டம் : திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தாா்…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ( 18.12.2023 )  காலை மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை கோவையில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மக்களுடன் முதல்வருக்கான முகாம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்காக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காணொளி மூலம் பதிவேற்று செய்யப்பட்டு வருகிறது. இன்று துவங்கிய அந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக மற்றும் ஊராட்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வாழ்வாதார கடன் உதவிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்கள் உள்ளிட்ட துறைகளுக்கான மனுக்களை பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். இந்நிகழச்சியில் மாவட்ட ஆட்சியா்  மா. பிரதீப்குமாா் ஐஏஎஸ், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினா் பழநியாண்டி மற்றும் அரசு அதிகாாிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்