Rock Fort Times
Online News

தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் விஜய் முதல் முறையாக டெல்லி பயணம்…* பிரதமர் மோடியுடன் இன்று(மே 27) மாலை சந்திப்பு…!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளாக பார்க்கப்படும் மேகதாது அணை விவகாரம், கரீப் காலத்திற்கான உர விநியோகம், மாநில மேம்பாட்டிற்கான நிதி, மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (மே 27) காலை சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்​கிறார். முதலில் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு அரசு இல்​லத்​துக்கு செல்​லும் விஜய்க்​கு, சிறப்​பான வரவேற்பு அளிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தொடர்ந்​து, ஜவகர்​லால் நேரு பல்​கலைக்​கழக வளாகத்​தில் திரு​வள்​ளுவர் சிலையை திறந்து வைக்​கும் நிகழ்​வில் விஜய் பங்​கேற்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த நிகழ்ச்​சிகள் முடிந்த பின்​னர், மாலை 4.30 மணி​யள​வில் பிரதமர் நரேந்​திர மோடியை முதல்​வர் விஜய் சந்​திக்​கிறார். முதல்​வ​ராகப் பதவி​யேற்ற பிறகு பிரதமர் நரேந்​திர மோடியை விஜய் சந்​திப்​பது பல்​வேறு எதிர்​பார்ப்​பு​களை ஏற்​படுத்தி உள்​ளது. இந்த சந்​திப்​பின் போது, பல்​வேறு திட்​டங்​களுக்​கான நிதி ஒதுக்​கீடு, வளர்ச்​சித் திட்​டங்​களுக்​குக் கிடைக்க வேண்​டிய ஒப்​புதல்​கள், மேகே​தாட்டு அணை விவ​காரம் உட்பட தமிழகத்​தின் கோரிக்​கைகள் குறித்த விரி​வான மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம், முதல்​வர் விஜய் வழங்​க​வுள்​ளார். தமிழகத்​துக்கு வர வேண்​டிய நிதி குறித்​தும் விஜய் பேசவுள்​ளார்.
பிரதமர் நரேந்​திர மோடி சந்​திப்பை நிறைவு செய்​ததும், முதல்​வர் விஜய் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​
ரா​தாகிருஷ்ணன் ஆகியோரை​யும் சந்​திக்க இருப்பதாக தகவல்​கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்​தி,

தொடர்ந்து அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே உள்​ளிட்ட தலை​வர்​களை​யும் முதல்​வர் விஜய் சந்​தித்து பேச உள்​ளார். தொடர்ந்​து, இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்​.ஏ.பேபி ஆகியோரை விஜய் சந்​திக்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. முதல்​வர் விஜய்​யின் முதல்​ டெல்​லி பயணம்​ என்​ப​தால்​ பலதரப்​பிலும்​பெரும்​ எ​திர்​பார்​ப்​பு நிலவுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்