Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்…!

திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதனை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் லி.மதுபாலன், மண்டலத் தலைவர்கள், துணை ஆணையர் க. பாலு ,நகர் நல அலுவலர் கார்த்திகேயன், செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்