மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம், பேரணி ஆகியவை நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று(10-07-2024) வழக்கறிஞர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாவட்ட துணை தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரெயில் மறியல் போராட்டத்தில் சங்க செயலாளர் சுகுமார், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர் முத்துமாரி, மூத்த வழக்கறிஞர்கள் மதானி, முத்துகிருஷ்ணன், அலெக்ஸ், கென்னடி, ஆதிநாராயணன், முன்னாள் துணைத் தலைவர் கே.டி. சிவக்குமார், முன்னாள் பொருளாளர் சசிகுமார், குற்றவியல் சங்க துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு, மூத்த பெண் வழக்கறிஞர் பானுமதி, வழக்கறிஞர்கள் மணிவண்ண பாரதி, விஜயா பாபு, என்.எஸ். திலக், சரவண சுந்தர், விக்னேஷ் உள்பட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Comments are closed.